முஸ்லிம் ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

கடந்த ஆறாம் திகதியிலிருந்து இடமாற்றம் பெற்றிருந்த முஸ்லிம் ஆசிரியர்களுக்கு கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளரினால் முக்கிய அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பின் படி, தமிழ் மொழி மூல பாடசாலைகளில் கடமையாற்றி தற்காலிகமாக இடமாற்றம் பெற்ற முஸ்லிம் ஆசிரியர்கள் அனைவரும் மீள தமது நிரந்தர பணி இடங்களில் கடமையாற்ற வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான கடிதமானது சகல பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில்,
கடந்த ஆறாம் திகதியிலிருந்து எம்மால் வழங்கப்பட்ட தற்காலிக இடமாற்றங்கள் அனைத்தும் இரத்து செய்யப்படுகின்றன.
இடமாற்றம் பெற்ற அனைத்து ஆசிரியர்களும் உடனடியாக தமது நிரந்தர சேவை நிலையங்களில் கடமையாற்ற வேண்டும்.
ஆசிரியர்கள் சமூகமளிக்க தவறும் ஒவ்வொரு தினமும் சம்பளமற்ற விடுமுறையாக கணிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.