பயங்கரவாத தற்கொலை தாக்குதல் – இதுவரை 149 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு

ஸ்டர் ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் பயங்கரவாத தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்த, காயமடைந்தவர்களுக்கு இதுவரையில் மொத்தம் 149 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் இதுவரையில் 153 பேரின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களில் 186 பேருக்கும் முழுமையான நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக இழப்பீட்டிற்கான அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மொத்தமாக 129 மில்லியன் ரூபாய் நஷ்டஈடும், காயமடைந்தவர்களுக்கு மொத்தமாக 20 மில்லியன் ரூபாய் நஷ்டஈடும் வழங்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படும் போது அவர்களது மருத்துவ பரிசோதனை அறிக்கையின் பிரகாரம் நஷ்டஈட்டுத் தொகை தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களில் இன்னமும் நஷ்டஈடு வழங்கப்பட வேண்டியவர்கள் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், அவை விரைவில் பூர்த்தி செய்யப்படும் என்றும் இழப்பீட்டிற்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.