குருநாகல் வைத்தியருக்கு எதிராக குவியும் முறைப்பாடுகள்

குருநாகல் வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவில் பணியாற்றிய வைத்தியர் சிஹாப்டின் மொஹமட் சபிக்கு எதிராக தொடர்ச்சியாக பலரும் முறைப்பாடு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை சுமார் 16 பெண்கள் அவர் மீது முறைப்பாடு செய்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குருணாகல், வாரியபொல, கலீவெல, தம்புள்ள, மவதகம, மெல்சிரிபுரா பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், குறித்த வைத்தியருக்கு எதிராக மேலும் பலர் முறைப்பாடு செய்ய தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘திருமணம் முடித்த தாங்கள் குறுகிய காலத்துக்குள் கர்ப்பம் தரித்தோம் என்றும், குருநாகல் போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மூலமாக முதலாவது குழந்தையைப் பெற்றுக்கொண்டபோதும், இன்றுவரையிலும் மீண்டும் கர்ப்பம் தரிக்கவில்லை’ என குறித்த முறைப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மீண்டும் கர்ப்பம் தரிக்காதவகையில், சத்திரசிகிச்சையேதும் அவர் மேற்கொண்டுவிட்டாரா என்ற சந்தேகம் எழுத்துள்ளது’ எனவும் அவர்கள் தங்களது முறைப்பாடுகளில் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.