ஐ.எஸ். பயங்கரவதிகள் தப்பிச்சென்றதாக கூறப்படும் விவகாரம்: கடற்படை நிரகரிப்பு

 

இலங்கையிலிருந்து ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த 15 பயங்கரவாதிகள்  இந்தியாவின்  இலட்சதீவிற்கு தப்பி சென்றுள்ளதாக இந்திய  ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. அவ்வாறு தப்பிச்செல்வதற்கு வாய்ப்புகள் இல்லை. ஆனால் குறித்த தகவல்கள் தொடர்பில்   கடற்படையினருக்கு உத்தியோகப்பூர்வமான அறிவுறுத்தல்கள்  எதுவும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்துள்ள கடற்படை குறித்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

 

இந்த விடயம் தொடர்பில் கடற்படை  பேச்சாளர்  லெப்டினன்  கொமாண்டர்  இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளதாவது,

கடந்த மாதம் 21 ஆம் திகதியன்று இடம்பெற்ற தற்கொலை  குண்டுதாக்குதல் சம்பவங்களை அடுத்து கடல் மார்க்த்துக்கான  பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.  அதற்கமைவாக  கடற்படையினர் தொடர்ந்தும் விசேட  ரோந்து நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய நிலையில் இலங்கையிலிருந்து  ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை  சேர்ந்த 15 பயங்கரவாதிகள் நாட்டை தப்பிச்சென்றுள்ளதாக கூறுகின்றமை ஏற்றுக்கொள்ள கூடியா விடயமல்ல என்றார்.

குறித்த விடையம் புலனாய்வு நிகழ்ச்சி நிரலா?