ரிசாட் – ஹிஸ்புல்லாவுக்கு எதிராக 2 குற்றச்சாட்டு: CID விசாரணை

அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் இரண்டு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.

குறித்த முறைப்பாடுகள் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்திவருவதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து தாக்குதல் அந்த சமவங்களுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பினை இவர்கள் இருவருக்கும் வைத்திருந்தார்கள் என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைவாக ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நாடாளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்கட்சியினரால் கொண்டுவரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.