யாழில் அந்தியேட்டிக்கு சேர்த்த பணத்தை வாரி சுருட்டிச் சென்ற கொள்ளையர்கள்!

அந்தியேட்டிக் கிரியைகளுக்காக சேர்த்து வைத்திருந்த இரண்டு இலட்சத்து எட்டாயிரம் ரூபா பணம் மற்றும் பெறுமதியான பொருட்கள் என்பன அதிகாலை நுழைந்த கொள்ளைக் கும்பலால் திருடிச் செல்லப்பட்டுள்ளது.
அந்தியேட்டிக் கிரியை இடம்பெறுவதற்கு நான்கு நாட்கள் மாத்திரமே மீதமிருந்த நிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
குறித்த சம்பவம் யாழ். உடுப்பிட்டி ஆரியாமலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அதிகாலை வேளையில் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளைக் கும்பல் வீட்டினுள் மயக்கமருந்தை வீசிவிட்டு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளது.
இதுகுறித்த விசாரனையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.