பஸ் ஓட்டுனர்களிற்கிடையில் மோதல் ; ஒருவர் காயம், ஒருவர் கைது

பஸ் ஓட்டுனர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் கை முறிந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

 

நேற்று சனிக்கிழமை பகல் நெல்லியடி,  மாலுசந்திப் பகுதியில்  உள்ள வாகனம்  நிறுத்தும் இடம் ஒன்றில் குறித்த  சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறை  – கொழும்பு சேவையில் ஈடுபடும் தனியார் சொகுசு பஸ்கள் அப்பகுதியில் உள்ள ஓர் இடத்தில் நிறுத்தப்படுவதாகவும் அங்கு இரண்டு பஸ் ஓட்டுனர்களிற்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு அடிதடியில் முடிந்தது.

இதில் ஒருவர் கைமுறிந்த நிலையில் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மற்றைய நபர் நெல்லியடி பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.