தீவிரவாத அமைப்பை சேர்ந்த 15 பேர் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தப்பியோட்டம்

இது ஒரு நிகழ்சி நிரலா?

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு அருகில் உள்ள லட்சத் தீவுகளுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 15 பேர் இலங்கையில் இருந்து லட்சத்தீவுகளுக்கு தப்பி சென்றுள்ளதாகவும், இது குறித்த எச்சரிக்கையை கேரள பொலிஸாருக்கு மத்திய உளவுத்துறை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.