கால் இரண்டையும் தூக்கி யாஷிகா செய்யும் புது வித்தை

நடிகை யாஷிகா ஆனந்த் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஜீவா – காஜல் அகர்வால் நடித்த கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இதையடுத்து துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் 2-வது சீசனில் பங்கேற்று பிரபலமடைந்தார் யாஷிகா ஆனந்த். அதே சீசனில் பங்கேற்ற ஐஸ்வர்யா தத்தாவுடன் சேர்ந்த் பார்ட்டிக்கு செல்வது, புகைப்படம் எடுப்பது, அதை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.