ஓடிக்கொண்டிருந்த பஸ் திடீரென பற்றி எரிந்தது-இரத்தினபுரி

இரத்தினபுரியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ் வண்டியொன்று அவிசா வளை, கிரிவந்தல பகுதியில் திடீரென தீப்பிடித்துள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை 6.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அனர்த்தம் ஏற்பட்ட போது, சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையில் பஸ்ஸின் சாரதியும் நடத்துனரும் அவசரமாக செயற்பட்டு அனைத்துப் பயணிகளையும் பஸ்ஸினுள் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளமையால் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை.

ஆரம்பத்தில் பஸ்ஸின் இயந்திரப் பகுதியில் தீ பரவியுள்ளதாகவும் பின்னர் குறித்த தீ கட்டுப்பாட்டை மீறியமை யால் பஸ் வண்டி முழுவதுமாக எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த பகுதிக்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் விரைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன் விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்து ள்ளனர்.