அப்பாவிகளை துன்புறுத்தாதீர்கள்! – சம்பந்தன் கோரிக்கை

பாதுகாப்பு என்ற போர்வையில் அப்­பாவி மக்களைத் துன்புறுத்த வேண்­டாம். பயங்கரவாதச் சட்டம், அவசரகாலச் சட்ட விதிகளைப் பயன்படுத்தி அவர்க­ளைக் கைது செய்ய வேண்டாம். உண்­மையான குற்றவாளிகள் மற்றும் சந்­தேகநபர்களை இனங்கண்டு கைது­செய்யுங்கள் என்று ஜனாதிபதி மைத்­திரிபால சிறிசேன, முப்படைத் தளப­திகள் மற்றும் பதில் பொலிஸ்மா அதி­பர் ஆகியோரிடம் தமிழ்த் தேசியக் கூட்­டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று நேரில் வலியுறுத்தினார்.
ஜனாதிபதி தலைமையில் நேற்று பாதுகாப்புச் சபைக் கூட்டம் நடை­பெற்றது. ஜனாதிபதியின் அழைப்புக்­கிணங்க இதில் கூட்டமைப்பின் தலை­வர் சம்பந்தனும் கலந்து கொண்டார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
‘நாட்டில் தீவிரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்று அப்பாவி மக்களின் உயிர்­கள் பறிக்கப்பட்டுள்ள நிலையில், பாது­காப்பைப் பலப்படுத்த வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதிக்கும் முப்படைத் தளபதிக­ளுக்கும் மற்றும் பொலிஸ்மா அதிப­ருக்கும் உண்டு.
தங்களின் கூட்டு முயற்சியால் தாக்­குதல்களுடன் சம்பந்தப்பட்டவர்களும், அதன் பின்னர் நடந்த வன்முறைச் சம்பவங்­களில் ஈடுபட்டவர்களும் கைதுசெய்யப்­பட்டு வருகின்றார்கள். இது வரவேற்கத்­தக்கது.
ஆனால், இந்த நடவடிக்கையின்போது அப்பாவி மக்களும் பாதிக்கப்படுகின்­றார்கள். பாதுகாப்பு என்ற போர்வை­யில் அப்பாவி மக்களைத் துன்புறுத்த வேண்டாம். பயங்கரவாதச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகளைப் பயன்ப­டுத்தி அவர்களைக் கைதுசெய்ய வேண்டாம். உண்மையான குற்றவாளி­கள் மற்றும் சந்தேகநபர்கள் ஆகியோரை இனங்கண்டு கைதுசெய்யுங்கள் என்­றார்.