மீன் பாடும் தேன் நாட்டில்……! 

மீன் பாடும் தேன் நாட்டில்
கடல் கிழித்து
முத்தாக
உதித்த முழு நிலவுகளே!!
பெளர்ணமியை அள்ளி 
கைகளில் சேர்த்து
வரைந்து வைத்த ஓவியங்கள்
இரட்டையாய் காட்சி தந்ததே
கனவுகளை அள்ளிக்கொட்டிட….
ஐம் புலன்களையும் சிறைப்பிடித்து சிற்பமாக்கிய நாட்கள்
வாளை மீனாய் வான் தொட்டு நிற்கிதே
இருமனமும் ஒருமனமாகி
இரு உயிரை துப்பி கையிலேந்தி,
கர்த்தருக்கு கண் குளிரவைத்த பாச மலர்களே.
பாசிக்குடா கடலோரம் கவிதைகள் இரண்டும் கரை கிறுக்க
கவிதைகளோடு ஏரல் சமைத்து
கரைந்துண்ட நாட்கள்
கடலலைகளாய் கரை தாவி நிற்கிறதே.
குழந்தைகளோடு குழைத்துண்ண
குடை பிடித்த வாகனத்தில் குதுகலமாய் செல்கையிலே ஏன் இந்த சோகம்???
குடை சாய்த்தானோ காலனவன்
கூட்டோடு குறையேதுமின்றி
விண்ணிலே கனவுகள் மெய்ப்பட.
உங்கள் சதைகளும் இரத்தமும்
மண்ணிலே கதை பேசட்டும்
மண் பெற்ற உறவுகளே வானேறி வாழ்ந்திடுங்கள்
கர்த்தரின் காலடியிலே.

💘💘💘வவுனியூர் ரஜீவன்💘💘💘