வீதிப் போக்கு வரத்து பொலிஸாரின் கவனயீனத்தால் , மோட்டார் சைக்கிளில் பயணித்த மகனுக்கும் தாய்க்கும் நடந்த விபரீதம்

வீதிப் போக்கு வரத்து பொலிஸாரின் கவனயீனத்தால் , மோட்டார் சைக்கிளில் பயணித்த மகனும்  , தாயும்  டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் கொடிகாமம் மிருசுவில் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் நேற்று  நிகழ்ந்துள்ளது.

மிருசுவில் ப் பகுதியில் இருந்து கொடிகாமம் நோக்கிப் பயணித்த  டிப்பர் வாகனத்தை மறு பக்கத்தில் பயணித்துக் கொண்டிருந்த வீதிப் போக்கு வரத்து ப் பொலிஸார் மறித்துள்ளனர்.

இதனால்  டிப்பர் சாரதி சடுதியாக பிரேக் பிடித்துள்ளார், இதனால் பின்புறமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த மகனும், தாயும் டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இடம்பெற பகுதி வளைவான வீதிப் பகுதி, அத்துடன் டிப்பர் பயணித்த பகுதியின் மறு பக்கத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வாறே வீதிப் போக்கு வரத்து பொலிஸார் டிப்பர் வாகனத்தை நிறுத்துமாறு சைகை செய்தமை, பின்னால் பயணித்த மோட்டார் சைக்கிளை கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தவறிய வீதிப் போக்கு வரத்து பொலிஸாரின் கவனயீனத்தால் இவ் விபத்து ஏற்பட்டுளதாக அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்