தீர்ப்பின் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை-மஹிந்த தெரிவிப்பு

பாராளுமன்றக் கலைப்பு தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகியதன் பின்னர் அரசியலின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து திட்டமிடப்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று  காலை தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.