சர்வாதிகாரத்தை தடுக்கும் ஆயுதமாக நீதிமன்றம் செயற்படுகிறது என்கிறார் குமார வெல்கம

ஜனாதிபதி முறையாக அரசியலமைப்பினையும், பாராளுமன்ற  விதிமுறைகளையும் பின்பற்றியிருந்தால் அரசியல் நெருக்கடிகள் ஏதும் ஏற்பட்டிருக்காது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, ஜனாதிபதியின் கருத்துக்கள் மீது நாட்டு மக்கள் எவருக்கும் தற்போது நம்பிக்கையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

 

நீதிமன்றத்தின் தீர்ப்பினையே அனைவரும் இறுதியாக நம்பியுள்ளனர். நீதித்துறை சுயாதீனப்படுத்தியுள்ளமையானது மகிழ்ச்சிக்குரியது.

இன்று சர்வாதிகாரத்தினை தடுக்கும் ஆயுதமாக நீதிமன்றம்  செயற்படுகின்றது. அரசியல் நெருக்கடிகள் அனைத்திற்கும் தீர்வு பெறும் விதமாக தீர்ப்பு அமைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.