ரணில், மஹிந்த மீது நம்பிக்கையில்லை ; ஜனநாயகத்துக்காகவே போராடுகின்றோம் – ரில்வின் சில்வா

Sri Lankan President Mahinda Rajapaksa (R) speaks with main opposition leader Ranil Wickremesinghe during the opening of the Conference of Asian Political Parties in Colombo on September 19, 2014. The meeting aims at solidarity among Asian political parties. AFP PHOTO/ Ishara S. KODIKARA (Photo credit should read Ishara S.KODIKARA/AFP/Getty Images)

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கும் பிரேரணையொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால் அதற்கு நாங்கள் ஆதரவளிக்க மாட்டோம் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

 

மேலும் எமக்கு ரணில் விக்கிரமசிங்க மீதும் நம்பிக்கையில்லை. மஹிந்த ராஜபக்ஷவின் மீதும் நம்பிக்கையில்லை. நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஒரு விடயத்திற்காக மாத்திரமே நாம் போராடுகின்றோம்.

அத்துடன் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காவே நாங்கள் போராடுகின்றோம். ஆகையினாலேயே மஹிந்த ராஜபக்ஷ மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து, அதற்கு ஆதரவாக வாக்களித்தோம் எனவும் அவர் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்ககும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.