மஹிந்த அதிர்ச்சி”மனைவியின் மோசமான செயற்பாடுகளால்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச செய்த மோசமான செயல் ஒன்றை சிரேஷ்ட ஊடகவியலாளர் ஷாமினி சேரசிங்க பகிரங்கப்படுத்தியுள்ளார்.

கடந்த 5ஆம் திகதி குறித்த ஊடகவியலாளரின் அயல் வீட்டில் உணவின்றி தவித்த நாய் ஒன்றை காப்பாற்றுவதற்கு ஊடகவியலாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அதற்காக அவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். பொலிஸார் அவ்விடத்திற்கு வந்து நாயை காப்பாற்றியுள்ளனர்.

இந்நிலையில் அன்றைய தினமே பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு அழைப்பேற்படுத்திய ஷிரந்தி ராஜபக்ச, நாயை காப்பாற்ற உதவிய அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடமாற்றம் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வீட்டின் உரிமையாளர் ஷிரந்தி ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமான ஒருவராகும்.

சட்டத்திற்கமைய கடமைகளை நிறைவேற்றி நாய் ஒன்றின் உயிரை காப்பாற்ற உதவி பொலிஸ் அதிகாரிகளுக்கு, மஹிந்தவின் பிரதமர் அதிகாரத்தை பயன்படுத்தி இவ்வாறு ஷிரந்தி ராஜபக்ச அழுத்தம் கொடுத்துள்ளார் என ஊடகவியலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த விடயங்களை வெளியிட்டுள்ளார்.