மதுபோதையிலிருந்த இரு பொலிஸார் கைது

வெலிகம பிரதேசத்தில் மதுபோதையில் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்ட இரு பொலிஸாரை வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வெலிகம மிரிஸ்ஸ பகுதியிலுள்ள உணவகம் ஒன்றிலேயே குறித்த இருவரும் முறையற்ற விதத்தில் நடந்துகொண்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ள குறித்த இரு பொலிஸாரும் மாத்தறை பொலிஸ் நிலையத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இரு பொலிஸாரும் அவர்களது வேலை நேரம் முடிவடைந்த பின்னரே குறித்த உணவகத்திற்குச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.