பொலிஸாரின் படுகொலைக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம்!

வவுணதீவில் பொலிசார் கொலை செய்யபட்டமையை கண்டித்து வவுனியாவில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா ஈச்சங்குளம் தவசியாகுளம் அ.த.க பாடசாலைக்கு முன்பாக ஆரம்பமான போராட்டம், 611 வது இரானுவ தலைமையகம் வரை சென்றடைந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி , மற்றும் 611 வது படைபிரிவின் இரானுவதளபதி ஆகியவர்களிடம் கையளித்தனர்.

மட்டக்களப்பு வவுணதீவுப் பகுதியில் கடமையில் இருந்த பொலிஸார் இருவர் இனந்தெரியாதவர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.