தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவளிக்கத் தயார் – த.மு.கூ.

1000 ரூபாய் அடிப்படை சம்பளம் என்ற நிபந்தனையுடன் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

நாட்டில் அரசாங்கமே இல்லாத போது ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்பது அர்த்தமற்றதாகும் என்பதாலேயே இலங்கை தொழிலாளர் காங்ரஸினால் முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு நாம் ஆதரவளிக்கவில்லை.

இலங்கை தொழிலாளர் காங்ரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்ததைப் போன்று அவரால் 1000 ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவளிக்காமையே இதற்கான காரணம் என எம்மை குறை கூற முற்படுவார் எனவும் தெரிவித்தார்.