காடுகளாக மாறுகின்றன தேயிலை தோட்டங்கள்

மலையக தோட்டத் தொழிலாளர்கள் தமது சம்பள உயர்வு கோரி பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தை தொடரும் இந்நிலையில் மஸ்கெலியா பிளான்டேசனுக்கு சொந்தமான தோட்டங்கள் தற்போது காடாகி வருகின்றது.

தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமையால் தேயிலை செடியின் மேல் கொடிகள் மற்றும் புல் வளர்ந்திருக்கிறது.

 

அத்துடன் பாம்பு போன்ற விலங்குகள் தோட்டங்களில் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் உடன் இதற்கு தீர்வொன்றை தருவதற்கு தோட்ட முகாமைத்துவம் முன்வரவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.