மக்கள் நிதியை செலவு செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை

புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்ட பின்னரே  நிதி பயன்பாடு குறித்து பாராளுமன்றத்தில் தீர்மானிக்க முடியும் என  பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

மூன்றாவது வாரமாகவும்  விகாரமாதேவி பூங்காவில் தொடரும் சத்தியாக்கிரக  போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனவரி மாதம் முதல் நிதியை பிரயோகிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லாவிட்டாலும் , பொதுத்தேர்தலுக்கான நிதியினை ஜனாதிபதியால் ஒதுக்கீடு செய்யமுடியும் .எவ்வாறாயினும் , பெரும்பாண்மை விருப்புடைய புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டதன் பின்னரே நிதிப்பயன்பாடுகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் தீர்மானிக்க முடியும் என்றார்.