குறுந்தகவல் மூலம் பரீட்சாத்திக்கு விடைகள் பகிர்வு : ஆசிரியை கைது!

நடைபெற்று கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர பரீட்சைகள் பரீட்சாத்தி ஒருவருக்கு விடைகளை எழுதுவதற்கு உதவி புரிந்ததாக கூறப்படும் ஆசிரியை ஒருவர் பலாங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியை தொலை பேசி குறுந்தகவல் மூலம் பரீட்சார்த்தியின் ஆங்கில பாட வினாப்பத்திரத்திற்கு விடையளிக்க உதவினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.