உணவக உரிமையாளர்களுக்கு கருத்தரங்கு

கிளிநொச்சி மாவட்ட கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பணியகத்திற்குட்பட்ட உணவு கையாளும் நிலையங்களின் உரிமையாளர்களுக்கான கருத்தரங்கு, கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பணியக மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

சுகாதார மருத்துவ அதிகாரி மருத்துவர் சுவேந்திரன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சி.குமரவேள், மாவட்ட போசணையியலாளர் லாவண்யா, பணியக மேற்பார்வை சுகாதாரப் பரிசோதகர் தா.சிவனேசராஜா, ஏனைய பிரிவுகளின் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் 125க்கு மேற்பட்ட உணவு கையாளும் நிலையங்களைச் சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.