கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு ஓர் அவசர அறிவிப்பு!

இரணைமடுக் குளத்தின் உச்ச நீர்மட்டமான 36அடியினை எட்டுவதற்கு இன்னும் 4 அங்குலம் மட்டுமே உள்ளதால் இன்று மாலை அளவில் உச்ச நீர்மட்டமான 36 அடியினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இரணைமடுக் குள நீர்மட்டம் இன்று 06.12.2018 காலை 5.30 மணிக்கு 35 அடி 8 அங்குலமாக உயர்வடைந்துள்ளது.விளாத்திக்காடு, பன்னங்கண்டி, முரசுமோட்டைஐயன்கோவிலடி, பழையவட்டக்கச்சி, பெரியகுளம், வெளிக்கண்டல் மற்றும
கண்டாவளை , ஊரியான் இதன்பின் நீர்வரத்து மிக துல்லியமாக கணிக்கப்பட்டு வெளியேற்ற வேண்டிய அளவு நீரை கொங்கிறீற் வான்கள் வெளியேற்றுவதற்கு மேலதிகமாக வான் கதவுகள் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் வான் கதவுகள் திறக்கும் நிலையில் நீர்ப்பாசன பொறியியலாளர்கள் தயார் நிலையில் உள்ளார்கள்.

எனவே நீர் வெளியேற்றப்படும் போது கனகராயன் ஆற்றின் மற்றும் அதன் கிளை ஆற்றுக்கு அருகாமையில் வசிக்கும் மக்கள் அவ் இடங்களிலிருந்து விலகி இருக்குமாறும் கால்நடைகளை அப்புறப்படுத்துமாறும் தயவுடன் வேண்டுகிறோம்.

பிரதானமாக விளாத்திக்காடு, பன்னங்கண்டி, முரசுமோட்டைஐயன்கோவிலடி, பழையவட்டக்கச்சி, பெரியகுளம், வெளிக்கண்டல் மற்றும்

கண்டாவளை , ஊரியான் பகுதிகள் அதி கூடுதல் பாதுகாப்பு பிரதேசமாக இனம் காணப்பட்டதால் முன்னெச்சரிக்கையாக கவனத்தில் கொண்டு முன் ஆயத்த நடவடிக்கை எடுக்கவும்.

அப்பகுதி கமக்காரர் அமைப்புக்களையும் பொது அமைப்புக்களையும் இரணைமடு குள கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் சார்பாக தயவுடன் வேண்டுகிறோம். ஒலிபெருக்கி அறிவித்தல்களை மேற்கொள்ளுமாறு விசேடமாக கமக்காரர் அமைப்புக்களை வேண்டுகிறோம்.

நாளை 07.12.2018 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு இரணைமடுக் குளத்தின் நீர்ப்பாசன திணைக்கள வளாகத்தில் விசேட பொங்கல் வழிபாடு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாவரும் கலந்துகொள்ளுமாறு அன்பாக வேண்டுகிறோம்.

-இரணைமடுக்குள கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம்-