இராணுவ முகாமை ஆக்கிரமிக்கும்- இரணைமடுக் குளம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் மழை நீடிப்பதால், குளங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில் இரணைமடு குளத்தின் நீர்மட்டமும் இன்று காலை 7 மணியளவில் 35.4 அடியாக காணப்படுகின்றது.
இரணைமடு குளம் அபிவிருத்தி செய்யப்பட்டதன் காரணமாக நீர் ஏந்து பரப்பு அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக இரணைமடுவில் அமைந்துள்ள கிளிநொச்சி இராணுவத் தலமையகத்தின் சில பகுதிகள் இரணைமடு குளத்தின் கீழ் சென்றுள்ளது.

குறித்த குளத்தின் நீர் முகாமிற்குள் வராது படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.