யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நூதனமான திருட்டு

Thief picking the wallet from the bag of a careless girl

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நூதனமான திருட்டுக்களுல் ஈடுபடும் பல இளம் பெண்களில் சிலர் சீ.சி.லி கமராக்களின் உதவியுடனும் தேரடியாகவும் அகப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்கள்போன்று உடை அணிந்து கையில். வைத்தியர்கள் வழமையாக பயன்படுத்தும் இதயத் துடிப்பு காட்டியுடன் இரு பெண்கள் சந்தேகத்திற்கு இடமாக நடமாடியதோடு ஒருவர் சத்திர சிகிச்சைக் கூடத்திற்குள் சென்று வைத்தியர்கள் சத்திரசிகிச்சைக்கு பயன் படுத்தும் ஆடைகளையும் உபயோகித்துள்ளார்.

இதேநேரம் இவ்வாறு வைத்தியர்கள் போன்று பாசாங்கு செய்து திருட்டில் ஈடுபட்ட இரு பெண்களையும் பிடிக்க முயன்ற சமயம் இரு பெண் ஊழியர்கள் மட்டுமே நின்றதனை பயன் படுத்தி ஒருவர் தப்பியோடிவிட்டார். இரண்டாம் நபர் பிடிபட்டு அது தொடர்பான விபரங்களை அறிந்தபோது பல திருட்டில் ஈடுபட்டதனை ஒப்புக்கொண்டவேளையில் அதில் வைத்தியசாலைக்குத் தேவையான ஓர் பொருளும் உள்ளடக்கமாக இருந்த்து. அதனை எடுத்துவர எமது பெண் ஊரியர் ஒருவருடன் அனுப்புவதற்காக மோசடியில் ஈடுபட்ட பெண்னினது கைத் தொலைபேசியை வேண்டி வைத்தவாறு அனுப்ப முயன்றோம்.

அதற்குள் தப்பியோடிய பெண்ணின் தகவல் மூலமாக எமது பிடியில் இருந்த பெண்ணின் காதலன் எனப்படுபவர் மோட்டார் சைக்கிளில் வந்தவேளை வேகமாக ஏறித் தப்பியோடிவிட்டார். இருப்பினும் அவரது கைத் தொலைபேசி எமது வசமே உள்ளது. அவ்வாறு கைப்பற்றிய தொலைபேசியில் அம்மா என சேமிப்பில் இருந்த இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தொலைபேசி கீழே இருந்த்து இதன் உரிமையாளர் யார் என வினாவினோம். தாயார் மட்டக்களப்பில் இருந்து உரையாடினார். தனது மகள் மருத்துவக் கல்வி கற்பதாகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பயிலுனராக உள்ளார். எனப் பதிலளித்தார்.

அவ்வாறானால் குறித்த பெண் வைத்தியசாலை மற்றும் இங்கு வரும் நோயாளர்களை மட்டும் ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கவில்லை. வீட்டாரையும் ஏமாற்றுகின்றார். என்பதனைப் புரிந்துகொண்டோம். இதே நேரம் அப் பெண்னை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு தப்பிச் சென்றவரை மிகத் தெளிவாக இனம் கண்டுகொண்டோம். அதன் பின்பு தப்பிச் சென்ற பெண்ணின் தொலைபேசியை பரிசீலித்தபோது அத் தொலைபேசில் இருவரின் புகைப்படங்கள் ஏராளம் உள்ளது.

அப் புகைப்படத்தின் உதவியுடன் குறித்த இளையரை தேடியபோது அவர் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர் தற்போது சுன்னாகம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகின்றார். இதேபோன்று கடந்த பல நாட்களாக நோயாளிகளிடம் ஏமாற்றி தங்க நகைகளை அபகரித்து மற்றுமோர் பெண்னையும் கையும் மெய்யுமாக பிடித்தோம். அதே பெண் முதல்நாள் இன்னுமோர் தாயாரிடம் தங்க நகை அபகரித்துச் சென்ற ஆதாரங்களும் உண்டு. இப் பெண்னிற்கு குழந்தை பிரசவித்து 30 நாட்களே ஆகின்றன.

இவ்வாறு குழந்தையுடன் பிடிபட்ட பெண்னிடம் விசாரணை மேற்கொண்டபோது முல்லைத்தீவு அளம்பிலைச் சேர்ந்தவர்.்இவரிற்கு யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இரு பெண்கள் பழக்கமானவர்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் இவ்வாறு பலமுறை மோசடியில் ஈடுபட்டு அவர்களே இவருக்கும் பழக்கி களவாடப்படும் நகைகளை விற்கும் இடங்களையும் ஒழுங்கு செய்துள்ளனர். இதனால் குறித்தவர்கள் தொடர்பில் சகல விடயங்களும் யாழ்ப்பாணம் பொலிசாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளது. என்றார்.