ஐ.நா. பிரதிநிதிகள் மனித உரிமைகள் குறித்து ஆராய முல்லைத்தீவு விஜயம்

இலங்கைக்கான விசேட பயணம் மேற்கொண்டுள்ள ஜக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் இன்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு சிவில் சமூக அமைப்புக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்.

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் தாக்கங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது

முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவியினை முல்லைத்தீவில் சந்தித்துள்ளார்கள். இந்த ஆட்சிமாற்றம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து ஜ.நா.பிரதிநிதிகளால் கேட்கப்பட்டுள்ளது.

இதற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி ஈஸ்வரி ஜ.நா பிரதிநிதிகளிடம் இந்த அரசாங்கம் அதிகாரத்திற்காக சண்டை பிடிக்கின்றார்கள் இது தெற்கில் நடந்துகொண்டிருக்கும் நிலை எந்த அரசாங்கம்  ஆட்சிக்கு வந்தாலும் காணாமல் போனவர்களுக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை என்பது தெளிவாக தெரிகின்றது

காணாமல் போனவர்கள் பிரச்சனையில் சர்வதேசம் தலையிட்டு ஒரு தீர்வினை பெற்றுத்தரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதுடன் மகிந்த அரசாங்கம் வந்தால் போராட்டங்களை முன்னின்று நடத்துபவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாலம் என்றும் என்று அச்சம் கொள்வதாகவும் அவர்கள் தங்கள் நிலைப்பாட்டினை தெரிவித்துள்ளார்கள்.

அடுத்து தமிழர் மரபுரிமை பேரவையினருடனான  சந்திப்பு முல்லைத்தீவு கோவில்குடியிருப்பு பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவர்களான வி.நவநீதன்,அருட்தந்தை லூயிஆம்ஸ்டோங்,உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு அவர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

இதன்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் முல்லைத்தீவு மாவட்டத்தில் எவ்வாறான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்று ஜ.நா பிரதிநிதிகள்  கேட்டுள்ளாலர்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி எல் வலயம் ஊடாக மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு அதனால் தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பிலும்,போரால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார பிரச்சனை தொடர்பிலும் அரசியல் கைதிகளின் பிரச்சனை தொடர்பிலும்,பௌத்த மயமாக்கல் தொடர்பிலும் ஜ.நா அதிகாரிகளிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளதாக தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவர் அருட் தந்தை லூஜி ஆம்ஸ்ட்ரோங் தெரிவித்தார்.