இரணைமடு குளத்தின் புனரமைப்பு பணிகள் நிறைவு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் இரணைமடு குளத்தின் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் அதனை மக்கள் மயமாக்குவதற்கான விடயம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் கிளிநொச்சி இரணைமடு நீர்பாசனை திணைக்கள கட்டத்தில் ஆளுநர் தலைமையில் இன்று (05) நடைபெற்றது.

வடமாகாண நீர்பானசனை திணைக்கள பணிப்பாளர் பிறேம்குமார் மற்றும் பொறியியலாளர்கள் இராணுவ உயர் அதிகாரிகள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் உட்பட கமக்கார அமைப்புக்களின் பிரநிதிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கலந்துரையாடலின் நிறைவில் இரணைமடு குளத்தின் அணைக்கட்டினை பார்வையிட்ட ஆளுநர் குளத்தின் நீர்மட்டம் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார். சமய வழிபாடுகளுடன் இரணைமடுக்குளம் சம்பிரதயாபூர்வமாக திறந்து வைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

200 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் நிறைவு செய்யபட்டதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 21 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்செய்கையினை மேற்கொள்ள கூடியதாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.