இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் உயர்வு!

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் 35 அடியை எட்டியுள்ளது.

இந்தக் குளத்தில் தற்போது 36 அடி வரையிலான நீரைச் சேமிக்கக் கூடிய ஏது நிலைகள் காணப்படுகின்றன.

இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையினால் இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் 35 அடிவரை உயர்வடைந்துள்ளது.

அதேவேளை வடக்கு மாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் குளத்தை நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.

36 அடியை எட்டியதன் பின்னரே இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்படும் என்று இரணைமடு கமக்கார அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள்,சி.வி.கே.சிவஞானத்திடம் தெரியப்படுத்தினர்.