வான் குடைசாய்ந்து விபத்து- 6 பேர் காயம்!

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் ஒன்று கெப்பித்திகொல்லேவ, துடுவெவ பகுதியில் குடை சாய்ந்ததில் 6 பேர் காயமடைந்தனர்.

வவுனியா கொறவபொத்தான பிரதான வீதியில் வவுனியாவிலிருந்து 13 ஆவது மைல்கல் பகுதியில் இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வான் கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.