மீண்டும் பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை பெறாத ஒருவரை பிரதமராக்க சிறிசேன முயற்சி- ஐதேக

பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை பெறாத ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அல்லது ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவை சேர்ந்த ஒருவரை புதிய பிரதமராக நியமிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

பிரதமராக ரணில் விக்கிரமசிங்வை நியமி;க்க மாட்டேன் என ஜனாதிபதி சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது அதற்கான காரணங்கள் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சட்டபூர்வமான அரசாங்கமொன்றின் கீழ்  தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கியதேசிய கட்சி தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் அரசமைப்பிற்கு எதிரான சட்டவிரோதமான நடவடிக்கைககள் நியமனங்கள் காரணமாக நாடு முழுமையாக ஸ்திரதன்மையிழந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய கட்சி தேர்தல்களை கண்டு அச்சமடையவில்லை என தெரிவித்துள்ள அவர் நாட்டில் ஸ்திரமான ஜனநாய அரசாங்கம் காணப்படும்வேளையே புதிய தேர்தலிற்கு அழைப்பு விடுக்க முடியும் எனவும்  தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதி தனது தவறுகளை சரிசெய்து அடுத்த சில நாட்களில் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பார் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.