பொருளாதாரத்திற்கு பாதிப்பு- அமெரிக்க வர்த்தக சம்மேளனம் கவலை

இலங்கையின் அரசியல் நெருக்கடி நிலை காரணமாக நாட்டிற்கு கிடைக்கவேண்டிய முதலீடுகளிற்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து  இலங்கையில் உள்ள அமெரிக்க வர்த்தக சம்மேளனம் கவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் சமீபத்தில் உருவாகியுள்ள சூழ்நிலை காரணமாக ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை நிலை குறித்து  அமெரிக்க வர்த்தக சம்மேளனம் கவலை வெளியிட்டுள்ளது.

தற்போதைய அரசியல் சூழ்நிலை உள்ளுர் வெளிநாட்டு வர்த்தக சமூகத்தினரிற்கு கவலையை அளிக்க கூடிய செய்தியை தெரிவிக்கின்றது எனவும் அமெரிக்க வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது.

மேலும் இதன் காரணமாக இலங்கையில் முதலீடு செய்யக்கூடியவர்கள் மத்தியில் ஏற்படக்கூடிய கரிசனை குறித்தும்  அமெரிக்க வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நெருக்கடியுடன் தொடர்புடைய அனைவரையும் தேசத்தின்நலனை

அடிப்படையாக வைத்து செயற்படுமாறு அமெரிக்க வர்த்தக சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தேசத்தினதும் பொருளாதாரத்தினதும் நலனை கருத்தில்கொண்டு உடனடி தீர்வை காணுமாறும் அமெரிக்க வர்த்தக சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.