பூஜையுடன் துவங்கிய விக்ரமின் பிரம்மாண்ட படம்

‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களும் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றன. வசூலிலும் சாதனை படைத்தன.
இதை தொடர்ந்து சரித்திர படங்களை பிரமாண்டமாக தயாரிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. தற்போது, தெலுங்கில் சிரஞ்சீவி, நயன்தாரா ஜோடியுடன் அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி உள்ளிட்ட பிரபலங்கள் பலர் நடிக்கும் ‘சைரா’ படம் உருவாகி வருகிறது. இது தவிர மகாபாரத கதை மலையாளம், இந்தியில் ரூ.1000 கோடி செலவில் தயாராக இருப்பதாக அறிவிப்பு வெளியானது. தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் ‘சங்கமித்ரா’ பிரமாண்டமாக படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் விக்ரம் நடிப்பில் ‘மகாவீர் கர்ணா’ என்ற பிரம்மாண்ட படமும் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ‘மகாவீர் கர்ணா’ படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள பத்மநாபசாமி கோவிலில் பூஜையுடன் நேற்று துவங்கியுள்ளது. பூஜையில் படக்குழுவினருடன் பிரபல நடிகர் சுரேஷ் கோபியும் பங்கேற்றிருந்தார்.இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். இது ரூ.300 கோடி செலவில் தமிழ், இந்தியில் இந்த படம் தயாராகிறது. மேலும் படத்தை தெலுங்கு, மலையாளத்திலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்