பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்மாட்டோம் – எஸ்.பி.

பாராளுமன்றம் நாளை புதன்கிழமை 10.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது.

இந்நிலையில் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் குறித்த பதவிநிலைகளை வகிப்பதை நிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (03-12-2018) இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்தது.

இந்நிலையில் நாளை கூடுகின்ற பாராளுமன்ற அமர்வில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கமாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.