2018 க.பொ.த. சா/த பரீட்சை இன்று ஆரம்பம்

6 இலட்சத்து 56,641 பரீட்சார்த்திகள் தோற்றம்
– 4 இலட்சத்து 22,850 பாடாசலை பரீட்சார்த்திகள்
– 4,661 பரீட்சை நிலையங்கள்

கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தர பரீட்சை இன்று (03)  ஆரம்பமானது. இப்பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள.

நாடு முழுவதும் உள்ள 541 பரிட்சை இணைப்பு நிலையங்களின் ஊடாக, 4,661 பரீட்சை மத்திய நிலையங்களில் ஆறு இலட்சத்து 56 ஆயிரத்து 641 பாடசாலை பரீட்சார்த்திகள் இப்பரீட்சைக்கு தோற்றுகின்றனர். இதில் 4 இலட்சத்து 22,850 பாடசாலை பரீட்சார்த்திகளும், 2  இலட்சத்து 33,791 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் உள்ளடங்குகின்றனர்.

மாணவர்கள் காலை 8 மணிக்கு முன்னர் நிலையங்களுக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் பி. சனத் பூஜித தெரிவித்தார்.

பரீட்சை தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு பரீட்சை நிலையத்திலும் ஒரு பொலிஸ் சார்ஜெண்ட் மற்றும் இரு பொலிஸ் கான்ஸ்டபிகள்கள் உள்ளிட்ட 3 பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.