ரூபாவின் பெறுமதி அதிகரித்தது

கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவுக்கான பெறுமதி குறைந்துகொண்டு சென்ற நிலையில் இன்றைய தினம் குறித்த பெறுமதியானது அதிகரித்துள்ளது.

அதன்படி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவுக்கான விலை இன்று (03-12-2018) 180.90 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 176.90 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.