யாழ்தேவி தொடருந்துடன் மோதிய வாகனம்

யாழ்ப்பாணம் தென்மராட்சி தொடருந்து வருவதற்கான சமிக்ஞை விளக்குகள் எரிந்த நிலையில் கடவையைக் கடக்க முயன்ற வாகனத்தை, யாழ்ப்பாணத்திருந்து கொழும்பு நோக்கிச் சென்ற யாழ்தேவி தொடருந்து மோதியுள்ளது.

இந்தச் சம்பவம் மிருசுவில் மருத்துவமனைக்கு முன்பாக இன்று காலை இடம்பெற்றுள்ளது.

மிருசுவில் தெற்குப் பகுதியிலிருந்து வேகமாக வந்த வாகனம் கடவையைக் கடக்க முற்பட்டபோது, தொடருந்து மிக அண்மையில் வந்த நிலையில் வாகனத்தை வேகமாகச் செலுத்தியதால் வாகனத்தின் பின்பகுதியில் தொடருந்து மோதியுள்ளது.