மாணவன் தூக்கிட்டு தற்கொலை

ஹோமாகம பகுதியில் பாடசாலை மாணவனொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவமொன்று நேற்று  இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவிக்கின்றது.

 

ஹோமாகம, தேவாலய வீதி பிடிபன வடக்கு பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய இசுரு சந்தீப் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஹோமாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேற்குறிப்பிட்ட பிரதேசத்தில் காணப்படும் வீடொன்றில் உள்அறையில் உள்ள ஜன்னலிலேயே குறித்த சிறுவன் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவத்தினத்தன்று வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்றிருந்த வேளையிலேயே குறித்த மாணவன் இவ்வாறு தூக்கிட்டு கொண்டுள்ளதாக குடும்பத்தாரின் வாக்குமூலங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த மாணவரின் சடலமானது இன்றைய தினம் ஹோமாகம வைத்தியசாலைக்கு மரண பரிசோதனைகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. எனினும் குறித்த தற்கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்பட்டிராத நிலையில் ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.