புதிய தூதுவர்கள் நால்வர் நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் மற்றும் ஒரு உயர்ஸ்தானிகர் இன்று (03) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தமது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்.

குரோஷியா, கானா, கொங்கோ மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தூதுவர்களே இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

01-திரு. பெடட் லூபியிக்  – குரோஷியா குடியரசுக்கான தூதுவர்

02- திரு. மைக்கேல் நில் நார்டே ஒக்கேய் – கானா குடியரசுக்கான உயர்ஸ்தானிகர்

03- திரு. ஆண்ட்ரே போஹ்- கொங்கோ குடியரசுக்கான தூதுவர்

04- திருமதி ரீட்டா கியுலியானா மன்னெல்லா – இத்தாலி குடியரசுக்கான தூதுவர்