சீனக் கடன்­பொறி தொடர்­பில்- ஐ.நாவில் விரை­வில் விவா­தம்!

இலங்­கை­யில் சீனா­வின் கடன்­பொறி தொடர்­பாக ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் அடுத்த கூட்­டத் தொட­ரில் விவா­திக்­கப்­ப­ட­ வுள்­ளது என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

ஐ.நாவின் சிறப்பு நிபு­ணர் ஜூவான் பப்லோ பொஹோஸ்­லாவ்ஸ்கி இந்த ஆண்டு இலங்கை வந்­தி­ருந்­தார். அவர் வெளி­நாட்­டுக் கடன்­கள் மற்­றும் மனித உரி­மை­கள் தொடர்­பான நில­வ­ரங்­களை ஆராய்ந்­தி­ருந்­தார்.

மனித உரி­மை­க­ளில் வெளி­நாட்­டுக் கடன்­க­ளின் தாக்­கம் தொடர்­பாக, ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் 2019ஆம் ஆண்டு பெப்­ர­வரி – மார்ச் கூட்­டத் ­தொ­ட­ரில் விரி­வான அறிக்­கை­யைச் சமர்ப்­பிக்­க­வுள்­ளார்.

இது தொடர்­பாக ஐ.நாவின் சிறப்பு நிபு­ணர் ஜூவான் பப்லோ பொஹோஸ்­லாவ்ஸ்­கி­யின் பேச்­சா­ளர் ஒரு­வர் கொழும்பு ஆங்­கில இதழ் ஒன்­றுக்கு தக­வல் வெளி­யி­டு­கை­யில்,

இந்த அறிக்கை பேர­வை­யின் அடுத்த அமர்­வில் சமர்ப்­பிக்­கப்­ப­டும். அதற்கு முன்­ன­தாக, பெப்­ர­வரி மாதத் தொடக்­கத்­தில் ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் இணை­யத்­தில் வெளி­யி­டப்­ப­டும் என்று தெரி­வித்­துள்­ளார்.

இலங்­கை­யின் பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு சீனா­வின் கடன் பொறியே கார­ணம் என்று குற்­றம்­சாட்­டப் பட்­டு ­வ­ரும் நிலை­யில் இந்த விவ­கா­ரம் ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் விவா­ திக்­கப்­ப­ட­வுள்­ளது.