இலங்கையுடன் இணைந்து செயற்பட தயார் – சீனா

பிராந்திய நாடுகளுக்கிடையில் ஒற்றுமையினை ஏற்படுத்துவதற்கும், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்குத் தேவையான அபிவிருத்தி செயற்பாட்டு இடைவெளியினை வழங்குவதற்கும் இலங்கையுடன் ஒன்றிணைந்து செயற்படத் தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

 

சீனாவின் சர்வதேச இற்ககுமதி கண்காட்சி நிகழ்வின் போதே இலங்கைக்கான சீனத்தூதுவர் சென்ங் ஹுஎ-யுவான் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்நதும் கூறுகையில்,

தற்போது அபிவிருத்தியினை இலக்காகக் கொண்டுள்ள உலக வர்த்தக ஸ்தாபனத்தில் இரு நாடுகளும் அங்கம் வகிப்பதுடன், அபிவிருத்தி தொடர்பில் முன்நோக்கிப் பயணிப்பது இருநாடுகள் எதிர்கொண்டுள்ள பொதுவான சவாலாக உள்ளது. அந்தவகையில் பிராந்திய நாடுகளுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதுடன், அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கான அபிவிருத்தி செயற்பாட்டு இடைவெளியினை வழங்குவதற்கும் இலங்கையுடன் ஒன்றிணைந்து செயற்படத் தயாராக இருக்கின்றோம் என்றார்.