இனந்­தெ­ரி­யா­தோர் விவ­ரங்­கள் திரட்­டல்- மக்­கள் பதற்­றம்

யாழ்ப்­பா­ணம், பொலி­கண்டி தெற்கு ஜே/375 கிராம அலு­வ­லர் பிரி­வில் வீடு­க­ளுக்கு இனந்­தெ­ரி­யாத சிலர் சென்று அந்த வீட்­டில் உள்­ளோர் தொடர்­பான விவ­ரங் களைச் சேக­ரித்­துள்­ள­னர்.

இந்­தச் சம்­ப­வம் நேற்­றுச் சனிக்­கி­ழமை இடம்­பெற்­றது.

பருத்­தித்­துறை இளை­ஞர் சேவை மன்­றத்­தின் உத்­தி­யோ­கத்தர் பங்­க­ஜ­னி­னால், இந்­தப் பகுதி தொடர்­பான விவ­ரங் க­ளைப் பெற­வந்­துள்­ள­தா­க­வும் இது தொடர்­பாக கிராம அலு­வ­ல­ருக்கு தெரி­யப்­ப­டுத்­தி­ய­தா­க­வும் தெரி­வித்து குடும்ப வரு­மா­னம், கடன் விவ­ரம், தொடர்­பா­டல் ஊட­கம், தொலை­பேசி இலக்­கம், வீட்டு கேற்­றின் நிறம், வங்­கிக் கணக்கு தொடர்­பான விவ­ரங்­க­ளைச் சேக­ரித்­துள்­ள­னர்.

குடும்­பத் தலை­வர்­கள் இல்­லாத நேரத்­தில் இந்த விவ­ரங்­களை சேக­ரித்­துள்­ள­னர். விவ­ரங்­கள் திரட்­டி­ய­வர்கள் மீது சந்­தே­கம் கொண்ட குடும்­பத் தலைவி ஒரு­வர், வந்­த­வர்­க­ளின் அடை­யாள அட்­டை­யைக் கேட்­டுள்­ளார். அவர்­க­ளி­டம் அடை­யாள அட்டை இல்­லாது காணப்­பட்­ட­னர்.

மக்­கள் சுதா­க­ரித்­த­தைத் தொடர்ந்து சில வீடு­க­ளு­டன் அவர்­கள் திரும்பி சென்­றுள்­ள­னர். இவர்­கள் தொடர்­பாக வீட்­டின் உரி­மை­யா­ளர்­க­ளால் கிராம அலு­வ­லரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது தம்­மி­டம் அனு­மதி கேட்­க­வில்லை என­வும் இது தொடர்­பாக பருத்­தித்­துறை இளை­ஞர் சேவை மன்­றத்­தின் அலு­வ­லர் பங்­க­ஜன் அவர்­க­ளி­டம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவ­ரும் எவ­ரை­யும் அனுப்­ப­வில்லை என­வும் தெரி­வித்­த­தாக அந்­தப் பகுதி மக்­கள் தெரி­விக்­கின்­ற­னர்