அரசியல் குழப்பத்தில் வெளிநாடுகள் தலையிட்டால் இரத்த ஆறு பெருக்கெடுக்கும்: தலைமை பிக்கு ஆவேசம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவர வெளிநாடுகளின்மத்தியஸ்தத்திற்கு இடமளிக்க முற்பட்டால் இரத்த ஆறு பெருக்கெடுக்கும் என்று கடும்போக்குவாதசிங்கள மக்கள் மற்றும் அமைப்புக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க பௌத்த தலைமைபிக்கு ஒருவர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்.

இதனால் நாட்டின் அரசியல் குழப்பத்தை சிங்களக் கட்சிகள் இணைந்து உடனடியாகதீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சிங்கள பௌத்த கடும்போக்குவாத தரப்பினர்மத்தியிலும், சிங்கள அரசியல்வாதிகள் மத்தியிலும் செல்வாக்கு மிக்க பௌத்த தலைமைபிக்குவாக இருந்துவரும் எல்லே குணவங்ச தேரர் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

இம்முறை இந்த பிரச்சனைக்கு தீர்வு காணாது மீண்டும் நாடாளுமன்றிலோ வெளியேிலோமோதலை ஏற்படுத்திக்கொண்டால், தேசத் துரோகிககள் அனைவரையும் விரட்டியடித்துவிட்டு,தேசப்பற்றுடையவர்களைக் கொண்ட அரசாங்கமொன்றை உருவாக்கியே தீரவோம்என்று எல்லே குணவங்ச தேரர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்.

கொழும்ப மருதானையிலுள்ள சிறிலங்கா மகா பிரிவென் விகாரையில் டிசெம்பர்2 ஆம் திகதியான நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டுஉரையாற்றிய சிங்கள பௌத்த கடும்போக்குவாத அமைப்புக்களை ஒன்று திரட்டி அமைத்துள்ள சிங்களதேசியவாத தேசிய அமைப்பின் தலைவரான எல்லே கணவங்ச தேரர், நாட்டில் குழப்பகரமான அரசியல் சூழலொன்று ஏற்படுத்தப்பட்டிருக்கும் தற்போதையசூழலில், ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரிகள் நால்வர் சிறிலங்காவிற்குவந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இந்த அதிகாரிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின்தலைவர்கள் டிசெம்பர் முதலாம் திகதியான சனிக்கிழமை திருகோணமலையில் வைத்துசந்தித்திருப்பதாகவும், இதன்போது நாட்டிற்கு பெரும் பாதகத்தைஎற்படுத்தக்கூடிய பல விடையங்களை கூட்டமைப்பினர் வலியுறுத்தியிருப்பதாகவும்குற்றம்சாட்டினார்.

வடக்கு – கிழக்கு மகாணங்களை மீள இணைக்குமாறும், அரசியல் கைதிகள் என்று அடையாளப்படுத்திவரும் சிறையிலுள்ள உயிருடன்இருக்கும் பயங்கரவாதிகளை விடுதலை செய்ய ஆவண செய்ய வேண்டும் என்றும், எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்குள் புதிதாக தயாரிக்கப்பட்ட அரசியல்சாசனத்தை நிறைவேற்றித் தருமாறும் கூடட்மைப்பினர் ஐ.நா அதிகாரிகளிடத்தில் வலியுறுத்திக்கேட்டுக்கொண்டுள்ளதாகவும் குணவங்ச தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த எல்லே குணவங்ச தேரர்,,..

“புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள அரசியல் சாசனம் மிகவும் ஆபத்தானது.எமக்குத் தெரியும் தற்போது நடைமுறையிலுள்ள அரசியல் சாசனத்தில் ஒன்பதாவதுசரத்திற்கு அமைய பௌத்த மதம் பாதுகாக்கப்பட்டு அதனை போசிப்பதற்கு அரசாங்கம்கடமைப்பட்டுள்ளது. அதேவேளை பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குமாறும் அதில் மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

ஆனால் புதிதாக தயாரிக்கப்பட்ட அரசியல் சாசனத்தில் இந்த சரத்துக்களை நீக்கியிருக்கின்றனர்.அதனை நீக்கவில்லை என்று கூறினாலும் அதன் பிரதி என்னிடம் உள்ளது. அதில் பௌத்த மதத்திற்கானமுன்னுரிமை நீக்கப்பட்டிருக்கின்றது. அதேவேளை இந்த நாட்டை மதச் சார்பற்ற நாடாகஅடையாளப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். அடுத்தது தேசிய கீதத்தை புதிதாக தயாரிக்கவும்திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த விவகாரம் எமது தேசிய கொடியை மாற்றியமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்”என்றார்.

அதேவேளை உத்தேச அரசியல் சாசனத்தில் நாட்டை ஒன்பது துண்டுகளாகபிளவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதுடன், ர்வதேசத்தின் தேவைக்கு அமைய சிறிலங்காவின் எல்லைகளை வகுக்கவும்திட்டமிட்டுள்ளதாகவும் குணவங்ச தேரர் குற்றம்சாட்டினார்.

மிக மிக இரகசியமாகவே புதிய அரசியல் சாசனம் தயாரிக்கப்பட்டுள்ளதாககுறிப்பிட்ட எல்லே கணவங்ச தேரர், எனினும் இரகசியமாக என்னென் பேச்சுக்களை நடத்தினாலும்அவை தொடர்பான அனைத்துத் தகவல்களும் தமக்குத் தெரியும் என்றும், தெரியவும் வரும் என்றும் சூளுரைத்தார்.

அத்துடன் சிறிலங்காவின் விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்டசர்வதேச சமூகம் தலையிடக் கூடாது என்றும், தமது நாட்டை பிளவுபடுத்த முற்படக் கூடாது என்றும்வலியுறுத்திய அவர்,. அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்என்றும் திட்டவட்டமாக அறிவித்தார்.

“2500 வருடங்களாக பாதுகாத்துவந்த எமது நாட்டை பிளவுபடுத்த துணை போகவேண்டாம் என்று அரசியல் கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றோம்” என்றும் குணவங்ச தேரர்குறிப்பிட்டார்.

அதிகார மோகம் காரணமாக சிறிலங்காவி்ல் இரத்த ஆறு பெருக்கெடுக்க இடமளித்திடவேண்டாம் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ள அவர், நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் குழப்பத்தை தீர்க்க வெளிநாட்டுமத்தியஸ்தத்திற்கு இடமளித்தால் சிறிலங்காவும் கொசோவோ, ஹைட்டிபோன்று மாற்றப்பட்டுவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

நாட்டில்இடம்பெற்றுவரும் அனைத்து நிகழ்வுகளையும் உன்னிப்பாகஅவதானித்துக்கொண்டு பொறுமையுடன் இருப்பதாகவும் கூறியுள்ள எல்லே குணவங்ச தேரர், அந்த பொறுமையை இழக்க வைக்கும் நிலைக்கு தங்களை தள்ளிவிட வேண்டாம் என்றும்தெரிவித்துள்ளார்.

டிசெம்பர் ஐந்தாம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூடவுள்ள நிலையில்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று நம்பிக்கைகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், இம்முறை தேவையற்ற மோதலை ஏற்படுத்த முனைந்தால், தேசத்துரோகிகளை விரட்டியடித்துவிட்டு தேசப்பற்றுடையவர்களைக் கொண்ட அரசாங்கமொன்றைஆட்சியில் அமர்த்துவோம் என்றும் எல்லே கணவங்ச தேரர் சூளுரைத்திருக்கின்றார்.

சிங்கள பௌத்த கடும்போக்குவாத மற்றும் சிங்கள பௌத்த இனவாத அமைப்புக்களைஒருங்கிணைத்து தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் என்ற அமைப்பை உருவாக்கி செயற்படும்எல்லே குணவங்ச தேரர், 2015 இல் மஹிந்த ராஜபக்ச பதவியை இழந்தது முதல்அவரைமீண்டும் ஆட்சிபீடம் ஏற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர் என்பதும்இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.