சீனா-பாகிஸ்தான் பொருளாதார நுழைவாயில் திட்டத்தில் இலங்கை பயனடையும்

பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் கலாநிதி. ~ஹித் அஹ்மத் ஹமத் “சீனா பாகிஸ்தான் பொருளாதார நுழைவாயில் பிராந்திய மற்றும் உலகளாவிய இணைப்பு  மற்றும்  பொருளாதார ஒத்துழைப்பிற்கான புதிய பார்வை” என்ற தலைப்பின் கீழ் விரிவுரையொன்றினை நிகழ்த்தினார்.

 

இவ்விரிவுரையானது இலங்கை ஓய்வு பெற்ற படைஅதிகாரிகளின் அமைப்பின் அழைப்பின்பேரில் இலங்கை கடற்படை தலைமையத்திலே இடம்பெற்ற முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வொன்றிலே இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன். ஜெனரல். என்.யு.எம்.எம். சேனாநாயக்க,  கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஸ்ரீமேவன் ரணசிங்க, கொதலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மற்றும் இலங்கை ஆயுதப்படைகளின் ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் பணியகத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் சீனா- பாகிஸ்தான்  பொருளாதார பாதையின் எண்ணிலடங்காத சிறப்பம்சங்கள் குறித்து கீழ்வருமாறு கூறினார்.

இந்நுழைவாயில் பிராந்திய இணைப்பிற்கான சிறந்த கட்டமைப்பாகும். அத்துடன் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளிற்கு மட்டுமல்லாது பிராந்தியத்திற்கும் இலங்கை, ஈரான், ஆப்கானிஸ்தான், இந்தியா, மத்திய ஆசிய குடியரசுகளிற்கும் நன்மை பயப்பதாகும்.  சீனா- பாகிஸ்தான்  பொருளாதார நுழைவாயில் திட்டமானது சீனா மற்றும் தென்னாசியாவினை மத்திய,யூரோ,மேற்கு ஆசியாவுடனும், பொருளாதார அபிவிருத்தியின் நிமித்தம் பாகிஸ்தானினது பல்வேறு நாடுகளுடன் விஸ்தரிக்கப்பட்ட இணைப்புக்களுடனும் தொடர்புபடுத்தும் ஊக்கியாக செயற்படும். இறுதியாக, பாகிஸ்தான் பிராந்தியத்திற்கும்  மேலதிக பிராந்திய வர்த்தக மற்றும் போக்குவரத்திற்கும் சிறந்த வர்த்தக மையமாக அமையும்.

சீனா – பாகிஸ்தான் பொருளாதார நுழைவாயிலானது உலகமுழுவதிலும் பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்துவதனை நோக்காகக் கொண்ட  சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின் முன்னனி முயற்சியாகும் என பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் இதன்பொழுது தெரிவித்தார்.

மேலும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகியன ஸ்திரத்தன்மையான இருதரப்பு உறவுகளை பேணுவதாகவும், இருநாடுகளும் வலுவான கலாசார பிணைப்புக்களால் இணைக்கப்படுகின்றன என உயர் ஸ்தானிகர் தனது விரிவுரையிலே குறிப்பிட்டார்.