யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் சொகுசு பஸ் ஒன்று புத்தளம் நாத்தாண்டியா பகுதியில் சற்றுமுன்னர் விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் சொகுசு பஸ் ஒன்று புத்தளம் நாத்தாண்டியா பகுதியில் சற்றுமுன்னர் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளதுடன் 04 பேர் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களில் மூவர் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து சம்பவத்தால் குறித்தப் பகுதியில் சற்று பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதோடு குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது