போதைக்கு எதி­ராக விழிப்­பு­ணர்வு மாண­வர்­க­ளுக்கு நடத்­தப்­பட்­டது

மது­சா­ரம் அருந்­தல், புகைத்­தல், போதைப்­பொ­ருள் பாவ­னை­யைத் தடுத்­தல் மற்­றும் பாது­காத்­தல் பற்­றிய விழிப்­பு­ணர்வு நிகழ்வு நேற்று இடம்­பெற்­றது.

இத­னூ­டாக வன்­மு­றை­யற்ற சிறந்த மாணவ சமு­தா­யத்தை உரு­வாக்­கு­தல் இதன் நோக்­கா­கும்.

வவு­னியா விபு­லா­னந்­தாக் கல்­லூ­ரி­யில் தரம் 12, 10, 9, 8 வகுப்­பு­க­ளின் மாண­வர்­க­ளுக்கு றக்மா நிறு­வ­னத்­தின் அனு­ச­ரணை­யு­டன் (கிராம முகா­மைத்­து­வத்­திற்­கான நிறு­வ­னங்­க­ளின் சம்­மே­ள­னம்) சமூக சேவைத் திணைக் க­ளத்­தா­லும் ஒழுங்­கு­ப­டுத்­த­லில் விழிப்­பு­ ணர்­வுக் கருத்­த­ரங்கு நடை­பெற்­றது. சுமார் 300 மாண­வர்­க­ளுக்கு இதன்­மூ­லம் விழிப்­பூ ட்­டப்­பட்­டுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

பாட­சா­லை­யில் மாண­வர்­கள், ஆசி­ரி­யர்­கள் மது­சா­ரத்­துக்கு எதி­ரான செயற்­குழு ஒன்றை அமைத்­துத் தமது செயற்­பா­டு­கள் தொடர்­பான விட­யங்­க­ளை­யும் தாங்­கள் எதிர்­நோக்­கிய சவால்­க­ளை­யும் மாதாந்­தம் கலந்­து­ரை­யாடி பொருத்­த­மான செயல் நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­ப­ட­வேண்­டும். அவற்றை மீளாய்வு செய்­ய­வேண்­டும். பாட­சாலை மட்­டத்­தில் மது­சா­ரம் புகைத்­தல் மற்­றும் போதைப்­பொ­ருள் பாவ­னை­யைக் குறைப்­ப­தற்­கான வலைப்­பின்­னல் செயற்­பாட்டை உரு­வாக்கி நடை­மு­றைப்­ப­டுத்­தல் மற்­றும் தொடர் நட­வ­டிக்­கை­யும் மேற்­கொள்­ள­வேண்­டும் என்று வேண்­டு­கோள் முன்­வைக்­கப்­பட்­டது.