ஏமன் யுத்தத்தில் சவுதிக்கு ஆதரவளிப்பதை நிறுத்த அமெரிக்கா தீர்மானம்

ஏமனில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகளுக்கு ஆதரவளிப்பதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் அமெரிக்க செனட் அவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில் 63 பெரும்பான்மை வாக்குகள் சவுதிக்கான ஆதரவை நிறுத்திக்கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜிம் மாட்டிஸ் மற்றும் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ அகியோர் குறித்த தீர்மானத்தை விரைவில் அமுல்படுத்த வலியுறுத்தியுள்ளனர்.

அல்லாதவிடத்து, ஏமனில் நிலைமை மேலும் மோசமடையும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.