இளைஞர்கள் மூவர் கைது

சமுர்த்தி வங்கிகளில் இரவு நேரத்தில் பணம் மற்றும் கோப்புகளைத் திருடிய சந்தேகநபர்கள் மூவர் களுஅக்கல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொம்பே, பாணந்துறை மற்றும் மஹியங்கனை பகுதிகளிலுள்ள சமுர்த்தி வங்கிகளில் பணத்தைக் கொள்ளையிட்ட சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடமிருந்து வேன், ஜீப் வண்டி , முச்சக்கரவண்டி மற்றும் உலோகப் பொருட்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் தெரணியகல மற்றும் களுஅக்கல பகுதிகளைச் சேர்ந்த 36, 26 மற்றும் 27 வயதான மூன்று இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களுக்கு எதிராக கேகாலை மற்றும் அவிசாவளை நீதிமன்றங்களில் சுமார் 20 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தொம்பே பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.