இன்று இடம்பெறவிருந்த முக்கிய விவாதம்: ஏமாற்றிய மகிந்த தரப்பு

இன்று நடைபெறும் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதில்லை ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் கருஜயசூரியவின் செயற்பாடானது நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கு அமைய இல்லையெனக் கூறியுள்ளனர்.

இதனைக் காரணமாக வைத்து ஆளும்தரப்பு உறுப்பினர்கள் சபை நடவடிக்கையை புறக்கணித்து வருகின்றனர்.

இதேவேளை மகிந்தவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து இன்று (29) விவாதம் இடம்பெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.